முதுமலை சிங்காரா வனப்பகுதிக்குள் அமைச்சர் வன்னியரசு சென்றது எப்படி? - சாட்டை துரைமுருகன் கேள்வி!
தமிழ்நாடு, 15 நவம்பர் (ஹி.ச.) முதுமலை சிங்காரா வனப்பகுதிக்குள் அமைச்சர் வன்னியரசு சென்று, யானைகள் மற்றும் புலிகளைத் துரத்துவது போன்ற காணொளியை வெளியிட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவ
துரைமுருகன்


தமிழ்நாடு, 15 நவம்பர் (ஹி.ச.)

முதுமலை சிங்காரா வனப்பகுதிக்குள் அமைச்சர் வன்னியரசு சென்று, யானைகள் மற்றும் புலிகளைத் துரத்துவது போன்ற காணொளியை வெளியிட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழக வனத்துறையால் தடை செய்யப்பட்ட முதுமலை சிங்காரா பகுதிக்குள் பழங்குடியின மக்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி இல்லாத நிலையில், அமைச்சர் வன்னியரசு மட்டும் அங்கு சென்றது எப்படி எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவருடன் முதுமலை வனத்துறை அதிகாரிகளும், வனப் பாதுகாவலர்களும் சென்றது எப்படி என்றும், அமைச்சருக்கு மட்டும் தனிச்சட்டம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக வனத்துறை அமைச்சரே அப்பகுதிக்குச் செல்லாத நிலையில், சமூக நீதித்துறை அமைச்சருக்கு அங்கு என்ன வேலை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சாலையில் செல்லும்போது யானையைத் துரத்தினாலே வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கும் வனத்துறை, யானைகள் மற்றும் புலிகளின் வாழ்விடங்களுக்கே சென்று அவற்றுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்படும் அமைச்சர் வன்னியரசு மீது நடவடிக்கை எடுக்குமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன்படி புலிகள் காப்பகத்தின் மையப்பகுதிக்குள் (Core Zone) அனுமதியின்றி செல்வது தண்டனைக்குரிய குற்றம் என்றும் தனது பதிவில் சாட்டை துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam