பழங்குடியின மக்களின் உரிமைக்காக உயிர்நீத்த பிர்சா முண்டா -துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே புகழாரம்!
மகாராஷ்டிரா, 15 நவம்பர் (ஹி.ச.) பழங்குடியின மக்களின் உரிமைகள் மற்றும் முன்னேற்றத்திற்காகப் போராடி தனது 25 வயதிலேயே உயிர்நீத்த சுதந்திரப் போராட்ட வீரர் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பழங்குட
Yeknath shinde


மகாராஷ்டிரா, 15 நவம்பர் (ஹி.ச.)

பழங்குடியின மக்களின் உரிமைகள் மற்றும் முன்னேற்றத்திற்காகப் போராடி தனது 25 வயதிலேயே உயிர்நீத்த சுதந்திரப் போராட்ட வீரர் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பழங்குடியின மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளான இன்று, நாடு முழுவதும் ஜன்ஜாதிய கௌரவ தினமாகக் கொண்டாடப்படுகிறது.

பழங்குடியின மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நாளை ஜன்ஜாதிய கௌரவ தினமாக அனுசரிக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்தார். இதையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு ஜன்ஜாதிய கௌரவ தினத்துடன் பிர்சா முண்டாவின் பிறந்தநாளும் கொண்டாடப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் காணொலி வாயிலாகப் பங்கேற்க உள்ளார்.

பகவான் பிர்சா முண்டா தனது 25 வயதிலேயே நாட்டிற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்தவர். பழங்குடியின மக்களின் உரிமைகள், அவர்களின் சமூக முன்னேற்றம் மற்றும் சமூகத்தின் முக்கியப் பிரிவில் அவர்களுக்குரிய இடத்தைப் பெற்றுத்தருவதற்காகத் தொடர்ந்து போராடியவர்.

அவரது தியாகத்தையும் சேவையையும் போற்றும் வகையில் அவர் 'தர்த்தி ஆபா' (பூமியின் தந்தை) என்று அழைக்கப்படுகிறார் என்றும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

மேலும், பழங்குடியின மக்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

பழங்குடியின மக்களின் கல்வி, வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த நலனை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆசிரமப் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், அவர்களின் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கும் மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறினார்.

Hindusthan Samachar / LOGESHWARI V