Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா, 16 நவம்பர் (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான வஞ்சங்கி மலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல விதிக்கப்பட்ட தடையை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
பாடேறு அருகே அமைந்துள்ள வஞ்சங்கி மலைப்பகுதி, 'மேகங்களின் மலை' என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக குளிர்காலத்தில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
இந்த நிலையில், கடந்த மாதம் ஏற்பட்ட 'அர்னாப்' புயலால் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, வஞ்சங்கி கிராமத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்லும் சாலை கடுமையாக சேதமடைந்தது.
இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கடந்த வாரம் முதல் அப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
தற்போது சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவை இன்னும் முழுமையடையாததால் சுற்றுலா பயணிகளுக்கான தடையை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பதாக வனத்துறை அதிகாரி கே.தேவிராஜேஸ்வரி தெரிவித்துள்ளார். மேலும், சாலையில் மண் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதுடன், அதிகாலை நேரத்தில் மலை ஏறிச் செல்ல போதிய மின்விளக்கு வசதியும் இல்லை என்பதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீரமைப்பு பணிகள் முடியும் வரை சுற்றுலா பயணிகள் அங்கு வருவதை தவிர்த்து, அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
புயல் காரணமாக அப்பகுதியில் உள்ள சில தங்கும் விடுதிகளும் சேதமடைந்துள்ளன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA