மருதமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம் - எம்.எல்.ஏ. டாக்டர் கனிமொழி சந்தோஷ் பங்கேற்று சாமி தரிசனம்
கோவை, 16 நவம்பர் (ஹி.ச.) கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் ஏழாம் நாளையொட்டி நேற்று காலை திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் கனிமொழி சந்தோஷ் கலந்து கொண்டு சாமி
A


கோவை, 16 நவம்பர் (ஹி.ச.)

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் ஏழாம் நாளையொட்டி நேற்று காலை திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் கனிமொழி சந்தோஷ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

விழாவையொட்டி தினமும் யாகசாலை பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் சுவாமி திருவீதி உலா நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து விழாவின் ஏழாம் நாளான இன்று காலை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி கோவில் வளாகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் கனிமொழி சந்தோஷ் பங்கேற்று பக்தர்களுடன் இணைந்து சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களிடம் நலம் விசாரித்து, அவர்களுடன் கலந்துரையாடினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA