திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருக்கல்யாண நிகழ்வில் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு!
திருவள்ளூர், 16 நவம்பர் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளையொட்டி முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகப் போற்றப்படும
திருத்தணி


திருவள்ளூர், 16 நவம்பர் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளையொட்டி முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகப் போற்றப்படும் திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற உற்சவர் திருக்கல்யாண நிகழ்வைக் காணவும், விரதத்தை நிறைவு செய்யவும் ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.

இந்நிலையில், நிகழ்ச்சிக்கு போதிய முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

குறைந்த எண்ணிக்கையிலான காவலர்கள் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதால், பக்தர்கள் இடையே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P