மது விற்பனை புகாரில் சோதனை -வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்!
திருப்பத்தூர், 16 நவம்பர் (ஹி.ச.) திருப்பத்தூர் அடுத்த புதூர்நாடு மலைப்பகுதியில் உள்ள புலியூர் கிராமத்தில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக திருப்பத்தூர் கலால் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதி
Arrest


திருப்பத்தூர், 16 நவம்பர் (ஹி.ச.)

திருப்பத்தூர் அடுத்த புதூர்நாடு மலைப்பகுதியில் உள்ள புலியூர் கிராமத்தில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக திருப்பத்தூர் கலால் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட போலீசார், புலியூர் கிராமத்தைச் சேர்ந்த துக்கன் என்பவரின் மகன் அனுமன் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அரசு மதுபான பாட்டில்கள் ஏதேனும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தபடி மதுபான பாட்டில்கள் எதுவும் வீட்டில் சிக்கவில்லை.

இருப்பினும், வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்தத் துப்பாக்கியை உடனடியாகப் பறிமுதல் செய்தனர்.

மேலும், வீட்டின் உரிமையாளரான அனுமனைப் பிடித்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் அனுமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தரப்பில் சொல்லப்படுகிறது.

அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகக் கிடைத்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில், எதிர்பாராத விதமாக நாட்டுத் துப்பாக்கி சிக்கிய சம்பவம் புதூர்நாடு மலைப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V