Enter your Email Address to subscribe to our newsletters

திருச்செந்தூர், 17 நவம்பர் (ஹி.ச.)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற கந்தசஷ்டி விழாவின் சூரசம்ஹார நிகழ்ச்சியில் 3 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
கந்தசஷ்டி விழா காலத்தில் மொத்தம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 310 பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.
விழாவுக்கு வந்த பக்தர்களின் வசதிக்காக 6 லட்சத்து 50 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள், சுமார் ஒரு லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன.
மேலும், 11 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
கனமழையால் ஏற்பட்ட போக்குவரத்து சவால்களைச் சமாளிக்க இரண்டு நாட்களுக்குள் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக 20 கட்டணமில்லாப் பேருந்துகள், 30 கூடுதல் அரசுப் பேருந்துகள் மற்றும் 402 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
பாதுகாப்புப் பணியில் 4,928 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
பக்தர்களின் வாகனங்களை நிறுத்த தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள், ஜே.ஜே. நகர் வாகன நிறுத்துமிடத்திற்குச் செல்ல தற்காலிகப் பாலங்கள் அமைக்கப்பட்டன. மேலும், அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படக் கட்டுப்பாட்டு அறைகளும் ஏற்படுத்தப்பட்டன.
கனமழை உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியிலும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகள் விரிவான முறையில் செய்யப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam