காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டும் – தேவகவுடா வலியுறுத்தல்!
பெங்களூரு, 17 நவம்பர் (ஹி.ச.) காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடகத்தின் நலன்கள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள தேவகவுடா, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தொடர்ந்து உத்தரவிடுவது கர்நாடகத்தின் குடிநீர் மற்றும் விவ
Deva gowda


பெங்களூரு, 17 நவம்பர் (ஹி.ச.)

காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடகத்தின் நலன்கள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள தேவகவுடா, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தொடர்ந்து உத்தரவிடுவது கர்நாடகத்தின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளில் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

மேலும், 1990-ம் ஆண்டு அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் 2007-ம் ஆண்டு வழங்கிய இறுதித் தீர்ப்பையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதற்காகப் புதிய நடுவர் மன்றம் அமைக்கப்பட்டால், ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை ஆய்வு செய்யும் அதிகாரத்தையும் அதற்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பெங்களூருவின் அதிகரித்து வரும் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் சமநிலை நீர்த்தேக்கத் திட்டத்தைச் செயல்படுத்துவது அவசியம் என்று தேவகவுடா குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை

2019-ம் ஆண்டு மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

கடந்த ஜூன் 29-ம் தேதி சில விளக்கங்களைக் கோரி திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், தேவையான திருத்தங்களுடன் ஆகஸ்ட் 13-ம் தேதி மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

கோதாவரி – கிருஷ்ணா – காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் மொத்தம் 147.7 டிஎம்சி தண்ணீரைப் பகிர்ந்தளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் கர்நாடகாவுக்கு 15.9 டிஎம்சி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட தேவகவுடா, அந்த அளவை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

மேலும், இந்த ஆண்டு கர்நாடகாவில் இயல்பான மழைப்பொழிவில் சுமார் 60 சதவீதமே கிடைத்துள்ளதாகவும், அணைகளில் 50 முதல் 55 சதவீதம் அளவிற்கே நீர் இருப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், மேகதாது அணைத் திட்டத்திற்கு தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அனுமதி வழங்கக்கூடாது என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

காவிரி நீர்ப்பங்கீட்டில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் தமிழகத்தின் நிலைப்பாடாக உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்குக் கடிதமும் எழுதியுள்ளது.

இந்நிலையில், மேகதாது அணை, காவிரி நீர்ப்பங்கீடு மற்றும் நதிகள் இணைப்புத் திட்டம் தொடர்பாகத் தனது நான்கு முக்கிய கோரிக்கைகளையும் பிரதமர் மோடி பரிசீலிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரங்கள் குறித்து பிரதமரை நேரில் சந்தித்துப் பேச விரும்புவதாகவும் தேவகவுடா தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V