அரியலூர் அரசு பள்ளியில் ஜாதி பாகுபாடு – 3 ஆசிரியர்கள் பணியிடமாற்றம்!
அரியலூர், 18 நவம்பர் (ஹி.ச.) அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் கீழவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜாதி ரீதியிலான பாகுபாடு நிலவியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 3 ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அப்
பணியிடமாற்றம்


அரியலூர், 18 நவம்பர் (ஹி.ச.)

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் கீழவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜாதி ரீதியிலான பாகுபாடு நிலவியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 3 ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன், ஆய்வக உதவியாளர் கண்ணதாசன் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோரிடையே ஜாதி ரீதியிலான பாகுபாடு நிலவியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆசிரியர்களுக்கு இடையேயான இந்த மோதலை மாணவர்களிடமும் திணித்ததாகப் புகார் எழுந்தது.

இதுகுறித்து கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகோபால் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, முதன்மைக் கல்வி அலுவலரின் அறிக்கையின் அடிப்படையில், தலைமை ஆசிரியர் முருகன் திருபுரந்தான் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், ஆசிரியர் ரவிச்சந்திரன் பரணம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், ஆய்வக உதவியாளர் கண்ணதாசன் காமரசவள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பள்ளிகளில் ஜாதி பாகுபாடு உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam