Enter your Email Address to subscribe to our newsletters

சபரிமலை, 18 நவம்பர் (ஹி.ச.)
சபரிமலை ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் ரோடு - கேரள மாநிலம் கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி, நவம்பர் 22-ம் தேதி முதல் ஜனவரி 26-ம் தேதி வரை மொத்தம் 20 சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன.
ரயில் எண் 08539, நவம்பர் 22-ம் தேதி முதல் ஜனவரி 24-ம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9.20 மணிக்கு ஸ்ரீகாகுளம் ரோட்டில் இருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 9.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் ரயில் எண் 08540, நவம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 26-ம் தேதி வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அதிகாலை 2.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.50 மணிக்கு ஸ்ரீகாகுளம் ரோடு சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam