ராகுல் காந்தியின் பொருளாதாரக் கருத்துக்கு பதிலடி – மேற்கு வங்க அமைச்சர் திலீப் கோஷ் விமர்சனம்!
கொல்கத்தா, 18 நவம்பர் (ஹி.ச.) கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியப் பொருளாதாரம் குறித்து ''பொருளாதாரப் பேரழிவு'' எனக் குறிப்பிட்டுப் பேசியதற்கு மேற்கு வங்க அமைச்சர் திலீப் கோஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
Gjans


கொல்கத்தா, 18 நவம்பர் (ஹி.ச.)

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியப் பொருளாதாரம் குறித்து 'பொருளாதாரப் பேரழிவு' எனக் குறிப்பிட்டுப் பேசியதற்கு மேற்கு வங்க அமைச்சர் திலீப் கோஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

பார்வையற்ற ஒருவருக்கு பகலிலும் இருட்டாகத்தான் தெரியும்.

தற்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பும் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த 12 ஆண்டுகளாக நாடு பாதுகாப்பாக உள்ளது. மக்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள்தான் அதிருப்தியில் உள்ளனர்.

இங்கு யாரும் தனது பேச்சைக் கேட்பதில்லை என்பதால், ராகுல் காந்தி வெளிநாடுகளுக்குச் சென்று பேசுகிறார் என்றார்.

திரிணமூல் காங்கிரஸ் (TMC) எம்.பி., அபிஷேக் பானர்ஜி நீதித்துறை தொடர்பாக தெரிவித்த கருத்துகள் குறித்தும் திலீப் கோஷ் விமர்சனம் செய்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

தேர்தலில் தோல்வியடையும்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம்சாட்டுகின்றனர். தற்போது நீதிமன்றங்களையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஜனநாயக அமைப்புகளைக் குறிவைத்து விமர்சிப்பது நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரான செயலாகும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து மதமாற்றம் குறித்துப் பேசிய அவர், பள்ளிகளில் மட்டுமின்றி குடியிருப்புப் பகுதிகள் மற்றும் குடிசைப் பகுதிகளிலும் மதமாற்ற நடவடிக்கைகள் அதிக அளவில் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், மதமாற்றத்தைத் தேசிய நலனுக்கு எதிரான செயலாகவும், சர்வதேச சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகவும் கருத வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு அவசியம் ஏற்பட்டால் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்றும் திலீப் கோஷ் கூறினார்.

Hindusthan Samachar / LOGESHWARI V