மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தண்ணீர் குழாய்கள் திருட்டு - போலீசார் வழக்குப்பதிவு
மதுரை, 18 நவம்பர் (ஹி.ச.) மதுரை புதிய மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகளில் பொருத்தப்பட்டிருந்த அரசுக்குச் சொந்தமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தண்ணீர் குழாய்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை புதிய ம
Stainless steel


மதுரை, 18 நவம்பர் (ஹி.ச.)

மதுரை புதிய மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகளில் பொருத்தப்பட்டிருந்த அரசுக்குச் சொந்தமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தண்ணீர் குழாய்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை புதிய மாவட்ட நீதிமன்றக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகளில் பொருத்தப்பட்டிருந்த தண்ணீர் குழாய்கள் மாயமாகியிருந்தன. இதுகுறித்து நீதிமன்றக் கட்டிடங்கள் மற்றும் நிர்வாகப் பிரிவு சார்பில் டாமோதர பாண்டியன் (42) என்பவர் அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆராய்ச்சிப்பட்டி, பிள்ளையார் கோவில் 2-வது தெருவைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் பாண்டியராஜன் (56) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரசு நீதிமன்ற வளாகத்திலேயே தண்ணீர் குழாய்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam