Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 18 நவம்பர் (ஹி.ச.)
இந்தியப் பொருளாதாரம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு சிவசேனா கட்சியின் தேசியச் செயலாளரும், தேசிய செய்தித் தொடர்பாளருமான ஷைனா என்.சி. விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு என்பதை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன.
இந்தியாவின் வளர்ச்சி குறித்த மக்களின் எதிர்பார்ப்புகளும், விருப்பங்களும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் நோக்கம் சர்வதேச அளவிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது. அதேபோல் பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸும் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.
இத்தகைய வளர்ச்சிகளுக்கு மத்தியில், ராகுல் காந்தி இந்தியப் பொருளாதாரத்தில் பேரழிவு ஏற்பட்டுள்ளதாகக் கருதுகிறார். இதுபோன்ற பார்வையே வெறுப்பு அரசியலுக்கு வழிவகுக்கிறது என்று ஷைனா என்.சி. தெரிவித்தார்.
இதற்கிடையே, பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் ராமர் மற்றும் ராமாயணம் குறித்து தெரிவித்த கருத்து தொடர்பாகவும் ஷைனா என்.சி. தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ராமர் என்பது ஒரு மதம் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை. ராமாயணம் என்பது வெறும் மத நூல் அல்ல, இந்தியாவின் பண்பாட்டு மற்றும் அறநெறி விழுமியங்களை எடுத்துரைக்கும் அரசியலமைப்பைப் போன்றது என்பதை ஜாவேத் அக்தரும் ஏற்றுக்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
'ராமர் மீண்டும் வெற்றி பெறுகிறார்' என்று ஜாவேத் அக்தர் கூறுவதும், 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிடுவதும் சனாதன தர்மம் போராடாமலேயே வெற்றி பெற்றுவிட்டது என்பதற்கான அடையாளம் மட்டுமல்ல.
ஒரு சமூகமாக நம்மிடம் இருக்க வேண்டிய உயர்ந்த மதிப்புகள் மற்றும் நல்ல பண்பாட்டு விழுமியங்களின் வெற்றியையும் இது வெளிப்படுத்துகிறது என்று ஷைனா என்.சி. தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V