Enter your Email Address to subscribe to our newsletters

தாம்பரம், 19 நவம்பர் (ஹி.ச.)
தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தின் கீழ் செயல்படும்
பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையில் ஓஎம்ஆர், ஈசிஆர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆண்கள் தங்கும் விடுதிகளில் இந்தச் சோதனை நடைபெற்றது.
குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியுள்ள விடுதிகளில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக சென்னை கண்ணகி நகர் குடியிருப்புப் பகுதிகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, தடை செய்யப்பட்ட போதைத் தன்மை கொண்ட மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போதை மாத்திரைகளை வைத்திருந்ததாகக் கூறி ஐந்து பெண்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களை வாகனத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சோதனைப் பணியில் மூன்று உதவி ஆணையர்கள், 10 காவல் ஆய்வாளர்கள், 30-க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர் ஈடுபட்டனர். மொத்தமாக சுமார் 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையின் போது வெவ்வேறு இடங்களில் இருந்து போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பாகவும், அவற்றின் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V