Enter your Email Address to subscribe to our newsletters

நாக்பூர், 02 நவம்பர் (ஹி.ச.)
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மத்திய பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் விதர்பா அணியின் கேப்டன் ஹர்ஷ் துபே ஒரே இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைக்கும் வகையில் அசத்தியுள்ளார்.
நாக்பூரில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களில் யாஷ் துபே 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதைத்தொடர்ந்து விதர்பா அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்ஷ் துபே தனது அபாரமான பந்துவீச்சால் மத்திய பிரதேச வீரர்களை அடுத்தடுத்து வெளியேற்றினார்.
மத்திய பிரதேச அணியில் அதர்வா மஹாஜன் மட்டும் நிலைத்து நின்று விளையாடி 85 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ரன் குவிக்கத் தவறியதால் அந்த அணி 66.1 ஓவர்களில் 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
விதர்பா அணியின் கேப்டன் ஹர்ஷ் துபே 23.1 ஓவர்கள் வீசி, 4 மெய்டன் ஓவர்களுடன் 53 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மத்திய பிரதேச அணியின் முதல் விக்கெட்டை நிக்கிகெட் புடே வீழ்த்தினார். அந்த விக்கெட்டையும் ஹர்ஷ் துபே கைப்பற்றியிருந்தால், ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய அரிய சாதனையை படைத்திருப்பார்.
இதையடுத்து விதர்பா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA