குடும்பத் தகராறு காரணமாக தாய், 7 வயது மகள் கிணற்றில் குதித்து தற்கொலை
கரூர், 02 நவம்பர் (ஹி.ச.) கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேகா, வயது 36. இவரது மகள் ரீனு ஸ்ரீ, வயது 7. ரேகா, தனது கணவர் மகேஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிற
River Death


கரூர், 02 நவம்பர் (ஹி.ச.)

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேகா, வயது 36. இவரது மகள் ரீனு ஸ்ரீ, வயது 7.

ரேகா, தனது கணவர் மகேஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மனமுடைந்து போன ரேகா தனது 7 வயது மகளுடன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தற்கொலை செய்வதற்கு முன்பாக செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், குடும்பப் பிரச்சினை காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததா என்பது குறித்தும் வெள்ளியணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய், மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் கருப்பூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN