முதல்-அமைச்சர் பேச்சை மேடையேறி தடுத்தோம்,இ.எம்.எஸ். எடுத்த நிலைப்பாட்டை மறக்க முடியாது - திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன்
திருவனந்தபுரம், 02 நவம்பர் (ஹி.ச.) கேரள முன்னாள் முதல்-அமைச்சர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தொடர்பான பழைய நினைவுகளை சட்டசபை சபாநாயகர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார். இ.எம்.எஸ். முதல்-அமைச்சராக இருந்தபோது, கோட்டயத்தில் மாநில அளவிலான ப
A


திருவனந்தபுரம், 02 நவம்பர் (ஹி.ச.)

கேரள முன்னாள் முதல்-அமைச்சர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தொடர்பான பழைய நினைவுகளை சட்டசபை சபாநாயகர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார்.

இ.எம்.எஸ். முதல்-அமைச்சராக இருந்தபோது,

கோட்டயத்தில் மாநில அளவிலான பள்ளி இளைஞர் விழா நடைபெற்றது. அந்த விழாவில் இ.எம்.எஸ். மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மேடையில் ஏறி, அவரது பேச்சை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் தலையிட்டு, திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட போராட்டக்காரர்களை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தின்போது, போராட்டக்காரர்களிடம் இ.எம்.எஸ். எடுத்த நிலைப்பாடும், அவர் நடந்து கொண்ட விதமும் தன்னால் மறக்க முடியாத அனுபவம் என்று திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA