பெருங்களத்தூர் குடியிருப்புக்குள் புகுந்த 6 அடி நீள மலைப்பாம்பு!
சென்னை, 02 நவம்பர் (ஹி.ச.) சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ஆலப்பாக்கம், கணபதி நகர் குடியிருப்புப் பகுதியில் இன்று 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. வீட்டின் அருகே மலைப்பாம்பு ஊர்ந்து
A


சென்னை, 02 நவம்பர் (ஹி.ச.)

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ஆலப்பாக்கம், கணபதி நகர் குடியிருப்புப் பகுதியில் இன்று 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

வீட்டின் அருகே மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்து மீட்டனர். பின்னர், பிடிபட்ட மலைப்பாம்பை பாதுகாப்பான வனப்பகுதியில் விடுவிப்பதற்காக எடுத்துச் சென்றனர்.

இதற்கிடையே, மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் பாம்புகள் தஞ்சம் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் வர வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே, வீடுகளைச் சுற்றியுள்ள புதர்கள் மற்றும் செடிகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், குழந்தைகள் வெளியே செல்லும்போது பெற்றோர் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், பாம்புகள் தென்பட்டால் அவற்றை பிடிக்க முயற்சிக்காமல் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வனத்துறையினரின் துரித நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA