தெலங்கானாவுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்- அமித் ஷாவிடம் காங்கிரஸ் தலைவர் மதுயாஷ்கி கவுட் வலியுறுத்தல்
தெலுங்கானா, 02 நவம்பர் (ஹி.ச.) தெலங்கானா மாநிலத்துக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய பிறகே மாநிலத்துக்கு வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் காங்கிரஸ் தலைவர் மதுயாஷ்கி கவுட் வலியுறுத்தியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித
Telu


தெலுங்கானா, 02 நவம்பர் (ஹி.ச.)

தெலங்கானா மாநிலத்துக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய பிறகே மாநிலத்துக்கு வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் காங்கிரஸ் தலைவர் மதுயாஷ்கி கவுட் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹைதராபாத்துக்கு வருகை தர உள்ள நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மதுயாஷ்கி கவுட் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது.,

தெலங்கானா மாநிலத்துக்கு ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பாக, பிராந்திய ரிங் ரோடு (RRR) திட்டத்துக்கான நிதி இதுவரை வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாகவும் ரயில்வே அமைச்சரிடமிருந்தோ மத்திய அரசிடமிருந்தோ போதிய உதவி கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

மேலும், மாநிலத்தில் உருக்குத் தொழிற்சாலை மற்றும் ரயில் பெட்டித் தொழிற்சாலை அமைப்பதற்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு நிதியும் இதுவரை வழங்கப்படவில்லை. தெலங்கானா மாநிலத்துக்கு உரிய நிதிப் பங்கீடும் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பலமுறை பிரதமர் நரேந்திர மோடியையும் மத்திய அமைச்சர்களையும் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும், மாநிலத்துக்குச் சேர வேண்டிய நிதியும், ஏற்கெனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

எனவே, ஹைதராபாத்துக்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்பதாகவும், அதே நேரத்தில் தெலங்கானா மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுயாஷ்கி கவுட் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / LOGESHWARI V