புயல் பாதிப்பு- தமிழகத்தின் உதவியைக் கோரிய சந்திரபாபு நாயுடு!
ஆந்திரா, 02 நவம்பர் (ஹி.ச.) ஆந்திர மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மின்சாரக் கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்குத் தமிழக அரசின் உதவியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரியுள்ளார். இதுதொடர்பாகத் தமிழக முதலமைச்சர் விஜயுடன் அவர் தொலைபேசியில் பே
Andhra cm


ஆந்திரா, 02 நவம்பர் (ஹி.ச.)

ஆந்திர மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மின்சாரக் கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்குத் தமிழக அரசின் உதவியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரியுள்ளார்.

இதுதொடர்பாகத் தமிழக முதலமைச்சர் விஜயுடன் அவர் தொலைபேசியில் பேசியுள்ளார்.

அதில், ஆந்திர மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட புயலால் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் உள்ளிட்ட மின்சாரக் கட்டமைப்புகள் சேதமடைந்தன.

இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகத்தைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகளை விரைவுபடுத்துவதற்குக் கூடுதல் பணியாளர்களும் தேவையான இயந்திரங்களும் தேவைப்படுகின்றன.

இதையடுத்து, தமிழக அரசின் உதவியை நாடிய சந்திரபாபு நாயுடு, மின்சாரக் கட்டமைப்புகளைச் சீரமைக்கும் பணிகளுக்காகத் தமிழகத்திலிருந்து பணியாளர்களையும் இயந்திரங்களையும் அனுப்பி வைக்குமாறு விஜயிடம் கேட்டுக்கொண்டார்.

சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாகத் தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்ததாக ஆந்திர முதலமைச்சர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகத்தை விரைவாக மீட்டெடுப்பதற்காக அண்டை மாநிலங்களின் உதவியைப் பெறும் நடவடிக்கையில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகத் தமிழக அரசிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

மின்கம்பங்கள் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகளைச் சீரமைக்கும் பணிகளில் கூடுதல் பணியாளர்களை ஈடுபடுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகத்தை விரைவாகச் சீரமைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கையைத் தொடர்ந்து, தமிழகத்திலிருந்து பணியாளர்கள் மற்றும் இயந்திரங்களை அனுப்புவது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் கவனிக்கப்படுகின்றன.

எனவே புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள் சீரமைக்கப்பட்டு விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V