மின்சாரம் கொள்முதல் செய்தது மூலம் வாரியத்திற்கு ரூபாய் 2000 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வரும் தகவல் உண்மையா? - அப்பாவு கடிதம்
சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.) தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சொந்த உற்பத்தியை குறைத்தும் நீண்ட கால, குறுகிய கால, மின் கொள்முதலை தனியாரிடம் குறைத்தும் கடந்த செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 13 வரை யூனிட் 1-க்கு ரூ37 வீதம் தினம் 2 கோடி யூனிட் மின்சாரம் கொள்
Statement


சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.)

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சொந்த உற்பத்தியை குறைத்தும் நீண்ட கால, குறுகிய கால, மின் கொள்முதலை தனியாரிடம் குறைத்தும் கடந்த செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 13 வரை யூனிட் 1-க்கு ரூ37 வீதம் தினம் 2 கோடி யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்தது மூலம் வாரியத்திற்கு ரூபாய் 2000 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வரும் தகவல் உண்மையா? யார் உத்தரவின் பேரில் அதிகாரிகள் முடிவெடுத்தார்கள் என்பதை விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சார்பாக தலைமைச் செயலாளருக்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதி உள்ளார்.

அந்தக் கடிதத்தில்,

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு சொந்தமான மேட்டூர், வடசென்னை, தூத்துக்குடி, உடன்குடி அனல் மின் நிலையங்கள் மூலம் சுமார் 5830 MW திறன் கொண்ட மின் உற்பத்தியும், தனியாரிடம் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் யூனிட் 1-க்கு ரூ5.50 விலையில் 2,830 MW மின்சாரமும், இடைக்கால ஒப்பந்தம் மூலம் யூனிட் 1-க்கு சுமார் ரூ6 விலையில் 2814 MW மின்சாரமும், ஒன்றிய அரசின் 16 நிறுவனங்கள் மூலம் தமிழ்நாட்டின் பங்காக 6,668 MW மின்சாரமும் ஆக மொத்தம் 21,931 MW மின்சாரம் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு தினம் கிடைக்கிறது.

மேலும் காற்றாலை(Wind) மூலம் 9,546 MW மின்சாரமும், சூரிய ஒளி (Solar) மூலம் 14,369 MW மின்சாரமும் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கிடைக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மின் தேவை 14,000 MW முதல் 17,000 MW மட்டுமே தேவைப்படுகிறது. இத்தேவை தமிழ்நாடு மின்வாரியத்திற்கு சொந்தமாக தினம் கிடைக்கும் மின்சாரத்தில் 64% முதல் 77 % மட்டுமே தேவைப்படுகிறது.

தற்போது தமிழ்நாடு மின்வாரியத்திற்கு போதுமான மின் உற்பத்தி இருந்தும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 13 வரை தினம் சுமார் 2 கோடி யூனிட் மின்சாரம் யூனிட் 1-க்கு ரூ37-க்கு வீதம் கொள்முதல் செய்ததில் 29 நாட்களில் 2000 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதை, அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லையா ?

அக்காலக்கட்டத்தில் அனல் மின் நிலைத்திற்கு தேவையான நிலக்கரி இருப்பு இருந்தும் ஏன் பயன்படுத்த தவறினீர்கள்? நீண்டகால, இடைக்கால ஒப்பந்தம் மூலம் நமக்கு வர வேண்டிய மின்சாரத்தை ஏன் மின்துறை அமைச்சர் மேற்படி நாட்களில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து 2000 MW மின்சாரம் கொள்முதல் செய்வதில்லை எனவும், 1000 MW மின்சாரம் மட்டுமே கொள்முதல் செய்வதாகவும், சொன்ன அமைச்சர் அடுத்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் 300 MW தான் மின்சாரம் வாங்கப்படுகிறது என்றும் அதன்பின் மின்சாரம் கொள்முதலே செய்யவில்லை என்றும் முன்னுக்குப்பின் முரணான பேட்டியை கொடுத்துவிட்டு, யூனிட் 1-க்கு ரூபாய் 37 வீதம் தினம் 2 கோடி யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்ய உத்தரவிட்டது யார்?

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு சொந்தமாக அதிக அளவு மின்சாரம் இருக்கிற காலக்கட்டத்தில் மின்சார கொள்முதல் யூனிட் 1-க்கு 37 வீதம் 29 நாட்கள் கொள்முதல் செய்து மின்வாரியத்திற்கு ரூபாய் 2000 கோடி இழப்பு ஏற்படுத்தியவர்கள் யார் ?

எதற்காக, யார் உத்தரவின் பேரில் செயல்பட்டார்கள் ? தகுந்த விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, ஏற்கனவே கடனில் மூழ்கியுள்ள மின்வாரியத்தை மேலும் கடனாக்காமல் தமிழ்நாடு மின்வாரியத்தை கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN