Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 20 நவம்பர் (ஹி.ச.)
நெய்வேலி நிலக்கரி நிறுவனமான என்.எல்.சி. இந்தியா (NLC India) நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான லாபம் 13 சதவீதம் அதிகரித்து ரூ.1,764 கோடியாக உயர்ந்துள்ளது.
2026-27 நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் நிறுவனத்தின் லாபம் கடந்த ஆண்டைக் காட்டிலும் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி மற்றும் மின்சார உற்பத்தித் துறையில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் நிதிச் செயல்பாடு வளர்ச்சியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 18 சதவீதம் அதிகரித்து ரூ.9,449 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு பங்குக்கான வருவாய் (EPS) 27 சதவீதம் அதிகரித்து ரூ.13.45 ஆக பதிவாகியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியும் 32 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இதுதொடர்பான முதலீட்டாளர் விளக்கக்காட்சியை நிறுவனம் நவம்பர் 20-ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P