Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 20 நவம்பர் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சம்பை பகுதியைச் சேர்ந்த நாகபாண்டி- யோகநந்தினி என்ற தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் மீண்டும் கருவுற்ற நந்தினி நேற்று முன்தினம் இரவு பிரசவ வலிவந்து வலியால் துடித்துள்ளார்.
உடனடியாக கணவர் பாண்டி அவரது தந்தை மற்றும் அவரது சகோதரி முனீஸ்வரி ஆகியோரின் உதவியோடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்ட போது குழந்தை பிறக்கும் தருவாயில் இருந்ததால் அவர்களாகவே வீட்டில் பிரசவம் பார்த்ததாகவும் இதில் பெண் குழந்தை பிறந்ததாகவும் என கூறப்படுகிறது.
உடனடியாக குழந்தையின் தாய் நந்தினியை மட்டும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு குழந்தையை தங்களுடைய வீட்டின் அருகாமையில் புதைத்து விட்டதாக தெரிகிறது.
பின்னர் மருத்துவமனைக்கு சென்ற நந்தினியிடம் மருத்துவர்கள் விசாரணை நடத்திய போது குழந்தை இறந்து விட்டதாக கூறவே, மருத்துவமனை வட்டாரங்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி புகாரின் அடிப்படையில் ராமேஸ்வரம் நகர் காவல் நிலைய போலீசார் சம்பந்தப்பட்ட நாகபாண்டியன் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தி புதைக்கப்பட்ட குழந்தையை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே நாகபாண்டிக்கு பெண் குழந்தை இருந்ததாகவும் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்ததால் இந்த குழந்தையை வீட்டிற்கு பின்புறம் புதைத்ததாக கூறப்படுகிறது.
இதில் சம்பந்தப்பட்ட குழந்தையின் தந்தை நாக பாண்டி, குழந்தையின் தாத்தா கிருஷ்ணன், அத்தை முனீஸ்வரி ஆகியோரை பிடித்து நேற்று முழுவதும் போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்பு இரவு ராமேஸ்வரம் நீதிமன்ற நீதிபதி சுஜித்திடம் விசாரணைக்கு அழைத்து சென்றனர் விசாரணையின் முடிவில், முதற்கட்டமாக மூன்று நபர்களையும் அடுத்த மாதம் 03.12.2026 வரை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து மூன்று பேரும் ராமநாதபுரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN