Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 20 நவம்பர் (ஹி.ச.)
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த
17-ந் தேதி புதிய ஆயக்கட்டு விவசாய பாசனத்துக்காக, அணையில் இருந்து சுமார் 1½ கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதகை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் திறந்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதால் சர்ச்சை ஏற்பட்டது.
அனுமதி பெறாமல் மதகை திறந்ததாக பொதுப்பணித்துறையினர் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதற்கிடையே, அந்த மதகின் பூட்டுக்கு இருந்த 2 சாவிகளில் ஒன்று நீர்வளத்துறை அதிகாரிகளிடமும், மற்றொன்று ஆயக்கட்டு விவசாயிகளிடமும் இருந்து வந்தது.
இந்த நிலையில், சோத்துப்பாறை அணையின் உதவி பொறியாளர் மனோஜ்குமார் நேற்று பழைய பூட்டை அகற்றிவிட்டு புதிய பூட்டை பொருத்தினார்.
மேலும், புதிய பூட்டுக்கான 2 சாவிகளையும் அவரே எடுத்துச் சென்றார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA