தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா அல்லது நாடகம் நடக்கிறதா?- காயத்ரி ரகுராம் விமர்சனம்!
சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.) தொழில்துறை தொடர்பான ரகசியத் தகவல்கள் கசிந்ததாகக் கூறப்படும் விவகாரத்தை முன்வைத்து, அமைச்சர் கீர்த்தனாவை விமர்சித்து அதிமுக நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது
Gayathiri rahuram


சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.)

தொழில்துறை தொடர்பான ரகசியத் தகவல்கள் கசிந்ததாகக் கூறப்படும் விவகாரத்தை முன்வைத்து, அமைச்சர் கீர்த்தனாவை விமர்சித்து அதிமுக நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது,

கீர்த்தனா, நமது தொழில்துறைகள் தொடர்பான ரகசியத் தகவல்கள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் எப்படி நடைபெற்றது என்பதை ஒரு ரீல்ஸ் வீடியோவாக வெளியிடலாமே.

அந்தச் சம்பவத்தை அப்படியே நடித்துக் காட்டினால் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

இது விஜய் ரசிகர்கள் மற்றும் உங்களுடைய ரீல்ஸ் பின்தொடர்பவர்களின் சிறப்புக் கோரிக்கையாகும். முடிந்தால் நடிகர் விஜய்யையும் அந்த ரீல்ஸில் நடிக்க வைக்கலாம். அது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.

ஏனென்றால், வாக்களிக்கும்போது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரையும் விஜய்யாகவே கருத வேண்டும் என்று விஜய் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

அப்படியிருக்கும்போது, உங்கள் ரீல்ஸில் அனைத்து எம்.எல்.ஏ.க்களின் கதாபாத்திரங்களிலும் விஜய்யையே நடிக்க வைக்கலாமே என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்களுக்குப் பொழுதுபோக்கு மட்டுமல்ல, உண்மையும் தெரிய வேண்டும். தமிழகத்தில் ஆட்சி நடைபெறுவதாகவே தெரியவில்லை.

அனைவரும் மீண்டும் நடிக்கச் சென்றுவிடலாம். குறைந்தபட்சம் தமிழக மக்களுக்காவது சிறிது பொழுதுபோக்கு கிடைக்கும்.

மக்கள் உணவுப் பொருட்களின் விலையேற்றம், மின்கட்டண உயர்வு மற்றும் வரிச்சுமை எனப் பல்வேறு பிரச்சினைகளால் அன்றாடம் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆனால், மக்கள் துயரத்தில் இருக்கும்போது ஆட்சியாளர்கள் நடிப்பதில் மும்முரமாக இருப்பதாக விமர்சித்துள்ளார்.

இறுதியாக, ஆட்சி நடத்தச் சொன்னால் நாடகம் நடத்துகிறார்கள் என்றும் காயத்ரி ரகுராம் தனது பதிவில் கடுமையாக குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V