Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.)
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதியை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வரவேற்றுள்ளார்.
இந்தத் தீர்ப்பு இந்துக்களின் நம்பிக்கை மற்றும் வழிபாட்டு உரிமைக்குக் கிடைத்துள்ள முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
வெற்றிவேல்... வீரவேல்...!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதி, இந்துக்களின் நம்பிக்கைக்கும் வழிபாட்டு உரிமைக்கும் கிடைத்துள்ள முக்கியமான வெற்றியாகும். இந்தத் தீர்ப்பை மனதார வரவேற்கிறேன்.
இந்த விவகாரத்தில் தொடர்ந்து போராடியவர்கள், தங்களது உயிரைத் தியாகம் செய்தவர்கள், ஆதரவாகக் குரல் கொடுத்தவர்கள் மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்ட கோடிக்கணக்கான பக்தர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேவேளையில், நீதிமன்ற உத்தரவுகளை மதித்து தமிழக அரசு செயல்பட வேண்டும். இந்துக்களின் நம்பிக்கைக்கு உரிய மரியாதை அளித்து, திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழா எவ்வித பிரச்சினைகளும் இன்றி சுமுகமாக நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் அனுமதியை வரவேற்றுள்ள வானதி சீனிவாசன், தீபத் திருவிழா அமைதியான முறையில் நடைபெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V