செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கு- 41 நாட்களாகியும் கிடைக்காத தடயம்
விழுப்புரம், 21 நவம்பர் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி பகுதியில் கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பாக, 41 நாட்களாகியும் சிறுமி குறித்த எந்தத் தடயமும் கிடை
CBCID


விழுப்புரம், 21 நவம்பர் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி பகுதியில் கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பாக, 41 நாட்களாகியும் சிறுமி குறித்த எந்தத் தடயமும் கிடைக்காத நிலையில், சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் 31-வது நாளாக ஆலம்பூண்டி பகுதியில் முகாமிட்டுள்ள சிபிசிஐடி போலீசார், இன்று சிறுமியின் எதிர்வீட்டில் வசிக்கும் மஞ்சுளா, அவரது மருமகள் மகேஸ்வரி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவரின் மனைவி பவானி ஆகிய 3 பெண்களிடம், சிறுமி படித்த பள்ளியில் வைத்து டிஎஸ்பி கீதா தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராஜதுரையிடம் ரகசிய இடத்தில் வைத்து டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான மற்றொரு குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 8 பேரின் செல்போன்களை கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் பெற்றுச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து 10-வது நாளாக அவர்களது செல்போன்கள் மற்றும் வங்கி ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிறுமி காணாமல் போய் 41 நாட்களைக் கடந்தும் இதுவரை எந்தத் தடயமும் கிடைக்காததால், பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam