காவிரி விவகாரத்தில் திமுக, தவெக அரசுகள் தவறான அணுகுமுறை – அதிமுக எம்.பி. இன்பதுரை குற்றச்சாட்டு
தமிழ்நாடு, 22 நவம்பர் (ஹி.ச.) காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களில் திமுக தாக்கல் செய்த தனி மனுவும் அடங்கும் என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பத
Inbadurai


தமிழ்நாடு, 22 நவம்பர் (ஹி.ச.)

காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களில் திமுக தாக்கல் செய்த தனி மனுவும் அடங்கும் என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கடந்த நவம்பர் 20ஆம் தேதி காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களில் திமுக தாக்கல் செய்த தனி மனுவும் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி இறுதித் தீர்ப்பின்படி செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் அதிகார வரம்பிற்குள் வரும் விவகாரங்களில், அவற்றின் பணிகளை உச்சநீதிமன்றம் ஏற்க முடியாது எனத் தெளிவுபடுத்தி, தவெக அரசு தாக்கல் செய்த மனுக்களையும், திமுகவின் தனி மனுவையும் தேவையற்றவை எனக் கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதிமுக போராடிப் பெற்ற காவிரி உரிமையை, திமுகவும் தவெக அரசும் இணைந்து தவறான அணுகுமுறை மூலம் நீர்த்துப்போகச் செய்ய முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், மேகதாது அணை விவகாரத்தில் திமுகவின் கோரிக்கையை தமிழக அரசு அவசரமாக ஏற்று, சட்டமன்றத் தீர்மானத்தில் தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சேர்த்தபோதே, அது காவிரி உரிமைக்கு எதிரான சட்டமன்ற நடைமுறை மீறல் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் இயக்கம் அதிமுக மட்டுமே என்றும் தனது எக்ஸ் பதிவில் இன்பதுரை தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam