போக்சோ வழக்கில் 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த அக்னிபாத் பயிற்சி வீரர் கைது
திண்டுக்கல், 22 நவம்பர் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14-வயது சிறுமியை கடந்த மே மாதம் நிலக்கோட்டை அடுத்த அணைப்பட்டி அருகே உள்ள மல்லியம்பட்டி கிராமத்தை சேர்ந்த அக்னிபாத் பய
Arrest


திண்டுக்கல், 22 நவம்பர் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14-வயது சிறுமியை கடந்த மே மாதம் நிலக்கோட்டை அடுத்த அணைப்பட்டி அருகே உள்ள மல்லியம்பட்டி கிராமத்தை சேர்ந்த அக்னிபாத் பயிற்சி வீரர் உதயகுமார் (21) என்பவர், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார்.

இதுகுறித்து, நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அக்னிபாத் பயிற்சி வீரர் உதயகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து உதயகுமார் தலைமறைவானார்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் இளஞ்செழியன் தலைமையில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு, தொழில்நுட்ப உதவியுடன் 6 மாதங்கள் தலைமறைவாக இருந்த அக்னிபாத் பயிற்சி வீரர் உதயகுமாரை கைது செய்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN