பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திண்டுக்கல், 22 நவம்பர் (ஹி.ச.) அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் திருக்கார்த்திகைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஓரிரு தினங்களில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளதாலு
Palani Murugan Temple


திண்டுக்கல், 22 நவம்பர் (ஹி.ச.)

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் திருக்கார்த்திகைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

ஓரிரு தினங்களில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளதாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை சுப முகூர்த்த தினம் மற்றும் வார இறுதி விடுமுறை தினம் என்பதாலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர்.

அதிகாலை முதலே அடிவாரம், கிரிவீதி மற்றும் மலைக்கோயில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் வகையில் படிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்குச் செல்லுதல், மொட்டையடித்தல், குழந்தைகளுக்குக் காது குத்துதல் மற்றும் சிறு குழந்தைகளுக்குத் தண்டாயுதபாணி சுவாமி வேடமிட்டு அழைத்து வருதல் உள்ளிட்ட வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

மலைக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்படுவதால், பொது தரிசன வரிசை மற்றும் கட்டண தரிசன வரிசைகளில் பக்தர்கள் நீண்ட தூரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பக்தர்கள் சுமார் முதல் 3 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து தண்டாயுதபாணி சுவாமியைத் தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. பக்தர்கள் பாதுகாப்பிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN