திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான பணிகள் தீவிரம் -உச்சிப் பிள்ளையார் கோவிலில் வண்ணம் தீட்டும் பணி தொடக்கம்!
மதுரை, 22 நவம்பர் (ஹி.ச.) மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபதிருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. கார்த்திகைத் திருவிழாவை முன்னிட்டு காலையில் சுப்பிரமணியசாமி- தெய்வான தங்க சப்பர வ
Tirupparankundram


மதுரை, 22 நவம்பர் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபதிருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

கார்த்திகைத் திருவிழாவை முன்னிட்டு காலையில் சுப்பிரமணியசாமி- தெய்வான தங்க சப்பர வாகனத்திலும், மாலையில் தங்கமயில், அன்ன வாகனம், ரிஷப வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இந்த நிலையில் நாளை மறுநாள் கார்த்திகை திருவிழா முக்கிய நிகழ்வான மலை மேல் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை திருநாளன்று தீபம் ஏற்ற இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் வழக்கமாக தீபம் ஏற்றும் உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்திற்கு வர்ணம் பூசும் பணி முன்னர் பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

உச்சிப்பிள்ளையார் கோவில் மேல் தளத்தில் வண்ணம் தீட்டும் பணி மற்றும் தாமர கொப்பரை வைக்கும் இடத்தில் தரைதளம் சீரமைக்கும் பணி உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.

உச்ச நீதிமன்றத்தில் மழை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு இருக்கும் நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் எப்போதும் வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் முன்னேற்பாடுகள் நடந்து வரும் நிலையில் இந்த ஆண்டு தீபம் ஏறுமா இந்த அரசு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுமா என பொதுமக்களும் முருகபக்தர்களும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு எங்கே தீபம் ஏற்ற போகிறார்கள் என்றால் எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

மேலும் திருப்பரங்குன்றம் கோவில் வாசல், மலை படிக்கட்டு பகுதி, 16 கால் மண்டபம் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட உயர் தொழில்நுட்பம் கொண்ட பேஸ் டிடக்சன் மற்றும் நைட் விஷன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

நாளை மறுநாள் பெரிய கார்த்திகை என்பதால் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மலை உச்சியில் தீபம் ஏற்றபடுமா, இல்லை கடந்த ஆண்டு போல பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றபடுமா என பொதுமக்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN