நாளை கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை
சென்னை, 22 நவம்பர் (ஹி.ச.) தமிழக அரசியல் களத்தில் நாளை மதியம் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் இந்த ஆலோசனையை நடத்த உள்ளதாகக் கூறப்
விஜய்


சென்னை, 22 நவம்பர் (ஹி.ச.)

தமிழக அரசியல் களத்தில் நாளை மதியம் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் இந்த ஆலோசனையை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத்தில், வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுங்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், விவாதத்தின்போது எழுப்ப வேண்டிய முக்கியப் பிரச்சினைகள், அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்களது தொகுதிகளில் நிலவும் முக்கியப் பிரச்சினைகள், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைக்க வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

குறிப்பாக, தொகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள், பல்வேறு காரணங்களால் தாமதமாகி வரும் திட்டங்கள், அவற்றை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதுடன், கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளையும் நேரடியாகக் கேட்டறியும் நோக்கில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் என்ன, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடுகள் எப்படி அமையப்போகின்றன என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam