Enter your Email Address to subscribe to our newsletters

திருமுல்லைவாயல், 22 நவம்பர் (ஹி.ச.)
திருமுல்லைவாயில் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஆலய நிர்வாகி பார்த்தசாரதி தலைமையில் கடந்த மூன்று நாட்களாக கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் அக்னி குண்டங்கள் அமைத்து, பல்வேறு மூலிகைகள் மற்றும் திரவியங்களைக் கொண்டு சிறப்பு ஹோமங்களை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து இன்று கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஐஜி விஜயகுமாரி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன், விநாயகர், சிவன், பெருமாள், ஐயப்பன் மற்றும் பகவதி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் திருமுல்லைவாயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவாகக் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் ஆலயத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து ஆலய நிர்வாகி விஜயலட்சுமி கூறுகையில், சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலயத்தில் ஸ்ரீதேவி கருமாரியம்மன் சிலை மட்டுமே இருந்ததாகவும், தற்போது படிப்படியாகப் பல்வேறு தெய்வங்களின் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், குழந்தைப் பாக்கியம் வேண்டி ஆலயத்திற்கு வந்து மனமுருகி வழிபடும் பக்தர்களுக்கு அம்மன் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிட்டார்.
ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் பணம் வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப காணிக்கை செலுத்தலாம் என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக, கனியை மட்டும் படைத்தும் அம்மனை வழிபடலாம் எனக் கூறினார்.
Hindusthan Samachar / LOGESHWARI V