ஒரு கிலோ தங்கத்திற்கு ரூ.65 லட்சம் விலை சரிவு -மோடியின் தொலை நோக்குப் பார்வைக்கு வர்த்தகர்கள் பாராட்டு
புதுடெல்லி, 22 நவம்பர் (ஹி.ச.) தங்கத்தைத் தேவையின்றி வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி முன்பு விடுத்த வேண்டுகோள் தற்போது தங்களுக்கு பெரும் நிதி இழப்பிலிருந்து பாதுகாப்பு அளித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக
Cts


புதுடெல்லி, 22 நவம்பர் (ஹி.ச.)

தங்கத்தைத் தேவையின்றி வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி முன்பு விடுத்த வேண்டுகோள் தற்போது தங்களுக்கு பெரும் நிதி இழப்பிலிருந்து பாதுகாப்பு அளித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக டெல்லி வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (CTI) தலைவர் பிரிஜேஷ் கோயல் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சில மாதங்களுக்கு முன்பு நாட்டின் குடிமக்கள் தேவையின்றித் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது தொழில்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புகள் எழுந்தன. ஆரம்பத்தில் பிரதமர் ஏன் இத்தகைய வேண்டுகோளை விடுக்கிறார் என்பது தங்களுக்கும் புரியவில்லை எனத் தெரிவித்தார்.

அந்தக் காலகட்டத்தில் ஒரு கிலோ தங்கத்தின் விலை ரூ.1.90 கோடியாக இருந்ததாகவும், தற்போது அது ரூ.1.25 கோடியாகக் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி ஒரு கிலோ தங்கத்திற்கு ரூ.65 லட்சம் வரை விலை சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தங்கத்தின் விலை அதிகமாக இருந்தபோது வாங்குவதைத் தவிர்த்ததால், ஏராளமான நகை வியாபாரிகளும் வர்த்தகர்களும் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பிலிருந்து தப்பியுள்ளதாக அவர் கூறினார்.

ஆன்லைன் மற்றும் நேரடி வர்த்தகத்தில் ஈடுபடும் தங்க முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் பிரதமரின் அறிவுரையால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய நிதி இழப்பு தவிர்க்கப்பட்டதாகத் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது தங்கத்தின் விலை குறைந்துள்ளதால், குடும்பங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்க நகைகளை வாங்கி வருவதாகவும், இதனால் அவர்களுக்குப் பயன் ஏற்பட்டுள்ளதாகவும் பிரிஜேஷ் கோயல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் CTI சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், வர்த்தகர்கள், நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Hindusthan Samachar / LOGESHWARI V