Enter your Email Address to subscribe to our newsletters

பீகார், 22 நவம்பர் (ஹி.ச.)
பீகார் மாநிலத்தில் உள்ள
நிதிஷ் சேது பாலம் திறப்பு விழாவின் போது பிரதமர் நரேந்திர மோடியை தேஜஸ்வி யாதவ் விமர்சித்து பேசியுள்ளார்.
அவருக்குப் பதிலளிக்கும் வகையில் ஐக்கிய ஜனதா தளத்தின் (JD(U)) மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் குமார் ஜா கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தத் திட்டத்திற்காக அவர்கள் செய்த பங்களிப்பு என்ன? அவர்கள் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்கள்.
தொடர்ந்து தேர்தல்களில் வெற்றிபெற்ற அதே நபர்கள்தான் அவர்கள். அப்படியிருக்கும்போது, அப்போது ஏன் இந்தப் பாலத்தைக் கட்டவில்லை?
இது நிதிஷ் குமாரின் தொலைநோக்குப் பார்வையில் உருவான திட்டம். 2014-2015 காலகட்டத்திலேயே அவர் இதற்கான யோசனையை முன்வைத்து, திட்டத்தை இறுதி செய்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசு தேவையான அனைத்து முடிவுகளையும் எடுக்கும். பொதுமக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகள் மற்றும் எங்களுடைய விரிவான இலக்குகளை நிறைவேற்றுவதில் நாங்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம்.
இந்தத் திட்டத்துடன் நிதிஷ் குமாரின் பெயர் இணைந்துள்ளது. இது பீகாரின் 13 கோடி மக்களிடமும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிதிஷ் குமார் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது மாநிலத்தின் நிலைமை எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். முந்தைய ஆட்சிக்குப் பிறகு அவர் பொறுப்பேற்றபோது பீகார் எதிர்கொண்ட சவால்கள் அனைவரும் அறிந்ததே.
நாட்டிலேயே நிர்வகிப்பதற்கு மிகவும் சவாலான மாநிலங்களில் ஒன்றான பீகாரின் ஆட்சிப் பொறுப்பு நிதிஷ் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், அவர் மாநிலத்தை நிர்வகித்த விதத்தால், இன்று பீகாரின் சாதனைகள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன என்று சஞ்சய் குமார் ஜா தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V