ஆவின் பாலகங்களின் வாடகை மீண்டும் 150% உயர்வு – முதலமைச்சர் விஜய்க்கு பால் முகவர்கள் சங்கம் அவசரக் கடிதம்!
சென்னை, 23 நவம்பர் (ஹி.ச.) சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆவின் நேரடிப் பாலகங்களுக்கான மாத வாடகையை 7 மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக 150% வரை உயர்த்தியுள்ள ஆவின் நிர்வாகத்தின் நடவடிக்கைக்குப் பால் முகவர்கள் சங்கம் கடும் கண்
ஆவின்


சென்னை, 23 நவம்பர் (ஹி.ச.)

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆவின் நேரடிப் பாலகங்களுக்கான மாத வாடகையை 7 மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக 150% வரை உயர்த்தியுள்ள ஆவின் நிர்வாகத்தின் நடவடிக்கைக்குப் பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி இடங்கள், காவல்துறை குடியிருப்புகள் மற்றும் ஆவினுக்குச் சொந்தமான இடங்களில் மொத்தம் 213 நேரடிப் பாலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் ஏற்கெனவே 300% வரை வாடகை உயர்த்தப்பட்ட நிலையில், நவம்பர் 1-ஆம் தேதி முதல் மீண்டும் 150% வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள முகவர்கள், வாடகை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளனர். ஒரு லிட்டர் பால் விற்பனைக்கு வெறும் 75 காசுகள் மட்டுமே கமிஷனாக வழங்கப்படுவதாகவும், மின்கட்டணம், பணியாளர் ஊதியம் உள்ளிட்ட செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த வாடகை உயர்வு தொடர்ந்தால் முகவர்கள் கடன் சுமையில் சிக்கி பாலகங்களை மூடும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும் சங்கம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாகத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ. பொன்னுசாமி, முதலமைச்சர் விஜய் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி ஆகியோருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு வாடகை உயர்வைத் திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P