தொடர் சரிவுக்குப் பிறகு தங்கம் விலையில் திடீர் உயர்வு – ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,080 அதிகரிப்பு!
சென்னை, 23 நவம்பர் (ஹி.ச.) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இன்று (நவம்பர் 23) திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.135 உயர்ந்து ரூ.11,600-க்கு விற்பனை
தங்கம்


சென்னை, 23 நவம்பர் (ஹி.ச.)

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இன்று (நவம்பர் 23) திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.135 உயர்ந்து ரூ.11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,080 உயர்ந்து ரூ.92,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து விலை குறைந்து வந்ததால் நகை வாங்கக் காத்திருந்த பொதுமக்களுக்கு இந்தத் திடீர் உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.175-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாகச் சரிவைச் சந்தித்த தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியிருப்பது நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P