திருப்பரங்குன்றம் மலையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை – சிவப்பு மண்டலமாக அறிவித்து காவல் ஆணையர் உத்தரவு!
மதுரை, 23 நவம்பர் (ஹி.ச.) மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு, மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க மதுரை மாநகர காவல் ஆணையர் தடை விதித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சட்டம் ஒழ
திருப்பரங்குன்றம்


மதுரை, 23 நவம்பர் (ஹி.ச.)

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு, மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க மதுரை மாநகர காவல் ஆணையர் தடை விதித்துள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், பொதுமக்களின் நடமாட்டத்தை முறைப்படுத்தவும் காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் திருப்பரங்குன்றம் மலை உச்சி முதல் மலை முழுவதும், கிரிவலப் பாதைகள், நுழைவு வளைவு முதல் 16 கால் மண்டபம் வரையிலான சாலை மற்றும் மலை அடிவாரப் பகுதிகளில் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி விமானங்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்ட பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

உரிய முன் அனுமதியின்றி ட்ரோன்களை இயக்கக் கூடாது என்றும், தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுரை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P