Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 23 நவம்பர் (ஹி.ச.)
இந்தியா கூட்டணி குறித்து மேற்கு வங்க அமைச்சர் திலீப் கோஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்தியா கூட்டணியினர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், இவர்கள் அனைத்தையும் மறந்துவிட்டு தங்களுக்குள் மோதிக்கொண்டு தனித்தனியாகச் செயல்படுவார்கள்.
யாரும் யாருக்கும் ஆதரவாக இல்லை. அதுவரை மக்களைக் குழப்பி, தவறாக வழிநடத்திக் கொண்டிருப்பார்கள்.
மம்தா பானர்ஜிக்கு இன்று ஒரு கவுன்சிலர் கூட இல்லை. அவர் எல்லா இடங்களிலும் தோல்வியடைந்துவிட்டார். அவரது கட்சியும் முடிவுக்கு வந்துவிட்டது.
கட்சியின் நிதி ஆதாரங்கள் காலியாகிவிட்டன; அலுவலகங்களும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் அவர் இங்கு என்ன செய்ய முடியும்? டெல்லியில் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்.
பலரைச் சந்திப்பதும், அவர்களுடன் அமர்ந்து தேநீர் அருந்துவதும்தான் அவரது வேலையாக உள்ளது” என்று விமர்சித்தார்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறைகள் குறித்துப் பேசிய திலீப் கோஷ் கூறுகையில்,
வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அங்கு இந்துக்கள் மீதான துன்புறுத்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வங்கதேசம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பும், சுதந்திரத்திற்குப் பிறகும், தற்போதும் அங்குள்ள இந்துக்களுக்கு நாம் எப்போதும் ஆதரவாக இருந்து வருகிறோம். அவர்களுக்காக நமது கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன.
இந்தியாவுக்கு வருபவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக நமது சட்டங்களில்கூட திருத்தங்களைச் செய்துள்ளோம்.
இந்த நாட்டு அரசும் மக்களும் எப்போதும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V