16 மாணவர்களின் இடைநீக்கம் ரத்து,கேரள அரசுக்கு எம்.வி. கோவிந்தன் கண்டனம்!
திருவனந்தபுரம், 23 நவம்பர் (ஹி.ச.) கேரள முதலமைச்சர் வி.டி. சதீசனின் கருத்துகள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ-எம்) மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கண
Kerala mp


திருவனந்தபுரம், 23 நவம்பர் (ஹி.ச.)

கேரள முதலமைச்சர் வி.டி. சதீசனின் கருத்துகள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்

(சிபிஐ-எம்) மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

கண்ணூரில் முதலமைச்சர் ஆற்றிய உரையில், இந்தியாவில் இதுவரை எந்த முதலமைச்சரும் விடுத்திராத சவால் இடம்பெற்றுள்ளது.

முதலமைச்சர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதுடன், பதவியேற்பின்போது எடுத்த உறுதிமொழியையும் மீறியுள்ளார். ஆனால், ஊடகங்கள் இந்த விவகாரத்தை உரிய முக்கியத்துவத்துடன் எடுத்துக்கொள்ளவில்லை.

முதலமைச்சரின் அறிவிப்பு, ‘கண்ணுக்குக் கண்’ என்ற பழிவாங்கும் அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.

பழிவாங்கும் நோக்கத்திலேயே சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்படுவதாக முதலமைச்சர் கூறுகிறார். இதன்மூலம் அவர் மக்களுக்கும் சட்டத்துக்கும் சவால் விடுத்துள்ளார்” என்று தெரிவித்தார்.

காலடி சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 16 மாணவர்களின் இடைநீக்க உத்தரவை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது குறித்தும் எம்.வி. கோவிந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “காலடி சமஸ்கிருதப் பல்கலைக்கழக விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைப் பல்கலைக்கழக நிர்வாகம் கேலிக்குரிய வகையில் நடத்தியது. மாணவர்கள் மீது பொய்யான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

அரசின் பிடிவாதமான போக்கால், துணைவேந்தர் மேல்முறையீடு செய்ததுடன், உச்ச நீதிமன்றத்தையும் நாடினார்.

இந்த விவகாரம் உயர்கல்வி அமைச்சரின் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற போதிலும், அமைச்சரோ அரசோ உரிய முறையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவர் ஆங்கிலேயர்களிடம் கூறிய கருத்தையே உயர்கல்வி அமைச்சர் மீண்டும் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தின் மூலம் அரசு, துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக சிண்டிகேட் ஆகியவை தங்களையே அவமானகரமான நிலைக்குத் தள்ளிக்கொண்டுள்ளன என்று எம்.வி. கோவிந்தன் விமர்சித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V