கூடலூரில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்ட 12 ஜோதிர் லிங்கங்கள்!
நீலகிரி, 24 நவம்பர் (ஹி l.ச.) திருச்சி மாவட்டம் சீராத்தோப்பில் பிரம்மாண்டமான ஜோதிர் லிங்க ஆலயம் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தில் வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி 12 ஜோதிர் லிங்கங்களும் பிரதிஷ்டை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளின்
Lingam


நீலகிரி, 24 நவம்பர் (ஹி l.ச.)

திருச்சி மாவட்டம் சீராத்தோப்பில் பிரம்மாண்டமான ஜோதிர் லிங்க ஆலயம் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தில் வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி 12 ஜோதிர் லிங்கங்களும் பிரதிஷ்டை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் இருந்து 12 ஜோதிர் லிங்கங்களும் ஆன்மிகப் பயணமாகப் புறப்பட்டுள்ளன.

அதன்படி, புறப்பட்ட ஜோதிர் லிங்கங்கள் நேற்று முன்தினம் இரவு நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வந்தடைந்தன. இதையடுத்து இன்று கூடலூர் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக அவை வைக்கப்பட்டன.

கோயிலுக்கு வந்த பக்தர்கள் 12 ஜோதிர் லிங்கங்களுக்கும் சிறப்பு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, பக்தி பரவசத்துடன் ஒவ்வொரு லிங்கத்தையும் தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.

இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் ஆன்மிக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, மாலை நேரத்தில் 12 ஜோதிர் லிங்கங்களும் கூடலூரில் இருந்து ஊட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டன.

அங்கும் பக்தர்களின் தரிசனத்திற்காக ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் இந்த 12 ஜோதிர் லிங்கங்கள் கொண்டு செல்லப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்தப் பயணம் நிறைவடைந்த பின்னர், அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி திருச்சி சீராத்தோப்பில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட ஆலயத்தில் 12 ஜோதிர் லிங்கங்களும் முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

கூடலூரில் ஒரே இடத்தில் 12 ஜோதிர் லிங்கங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், அப்பகுதி பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V