கோவையில் ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ பள்ளி விளையாட்டு விழா!
கோவை, 24 நவம்பர் (ஹி.ச.) கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியின் 2026-ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விழா, பள்ளி ஹாக்கி மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஸ்டேன்ஸ் பள்ளிகளின் தலைவர் டாக்டர் ஜேம்ஸ் ஞானதாஸ், மாணவர்களின் அண
H


கோவை, 24 நவம்பர் (ஹி.ச.)

கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியின் 2026-ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விழா, பள்ளி ஹாக்கி மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஸ்டேன்ஸ் பள்ளிகளின் தலைவர் டாக்டர் ஜேம்ஸ் ஞானதாஸ், மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

விழாவில், நான்கு ஹவுஸ்களைச் சேர்ந்த மாணவர்கள், என்.சி.சி. விமானப்படை மற்றும் கடற்படைப் பிரிவு மாணவர்கள் பங்கேற்ற அணிவகுப்பு நடைபெற்றது.

தொடர்ந்து பிரார்த்தனை, வரவேற்புரை மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி முதல்வர் ஐலீன் ஜெத்ரோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய டாக்டர் ஜேம்ஸ் ஞானதாஸ்,

வகுப்பறைகள் மாணவர்களுக்கு ஏட்டுக் கல்வியையும் கோட்பாட்டு அறிவையும் வழங்குகின்றன. ஆனால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கும் திறனையும், வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்கும் மனப்பக்குவத்தையும் விளையாட்டு மைதானங்களே கற்றுக்கொடுக்கின்றன என்றார்.

ஸ்டேன்ஸ் பள்ளி விளையாட்டு மைதானங்களை நவீனமயமாக்கும் திட்டங்களையும் அறிவித்தார். அதன்படி, முதற்கட்டமாக தற்போதுள்ள தடகள ஓடுதளம் புதுப்பிக்கப்பட உள்ளது. 2027-ஆம் ஆண்டிற்குள் புதிய தடகள ஓடுதளம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி மைதானங்கள் உருவாக்கப்பட உள்ளன.

இதனைத் தொடர்ந்து கால்பந்து மற்றும் கிரிக்கெட் மைதானங்களும் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து நடைபெற்ற விளையாட்டு விழாவில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், மென்பந்து எறிதல், தடை தாண்டும் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன.

மாணவர்களின் கராத்தே செயல்விளக்கம் மற்றும் சாகச நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களைக் கவர்ந்தன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Hindusthan Samachar / Durai.J