Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 24 நவம்பர் (ஹி.ச.)
மதுரை – கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை சந்திப்பில் இருந்து நவம்பர் 26ஆம் தேதி புறப்படவிருந்த ரயில் எண் 16722 மதுரை – கோவை விரைவு ரயில், பொள்ளாச்சி – கோவை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
போத்தனூர் – மதுக்கரை இடையே 22 கிலோவோல்ட் உயர் மின்னழுத்த மேல்நிலை மின்பாதையை அகற்றும் பணிகள் காரணமாக இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேற்கண்ட பணிகள் டிசம்பர் 10ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனால், நவம்பர் 26ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் விரைவு ரயில் வழக்கமான அட்டவணைப்படி முழுமையாக இயக்கப்படும்.
அதேவேளையில், டிசம்பர் 10ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் ரயில் எண் 16722, பொள்ளாச்சி – கோவை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ