ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பாராட்டிய மோகன்லால் கருத்துக்கு ஆனந்த் துபே ஆதரவு
மும்பை, 24 நவம்பர் (ஹி.ச.) ராகுல் காந்தியின் விமர்சனங்கள் குறித்து சிவசேனா தலைவர் ஆனந்த் துபே கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மார்கோ ரூபியோ, டொனால்ட் டிரம்ப் போன்ற தலைவர்களும், உலக வங்கியும் கூட இ
Anand dube


மும்பை, 24 நவம்பர் (ஹி.ச.)

ராகுல் காந்தியின் விமர்சனங்கள் குறித்து சிவசேனா தலைவர் ஆனந்த் துபே கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மார்கோ ரூபியோ, டொனால்ட் டிரம்ப் போன்ற தலைவர்களும், உலக வங்கியும் கூட இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள், தற்போதைய பொருளாதார அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதாகப் பாராட்டுகின்றனர்.

ஆனால், ராகுல் காந்தி இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ, பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும்போதோ, அரசாங்கத்தை மட்டுமல்லாமல் நாட்டையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதையும், தேசத்தை அவமதிப்பதையும் தொடர்ந்து செய்வதற்குப் பதிலாக, ராகுல் காந்தி ஆக்கப்பூர்வமான மற்றும் முக்கியமான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

அவரது இந்த அணுகுமுறையை மக்கள் தற்போது நன்கு புரிந்துகொண்டுள்ளனர்.”

மோகன்லால் இந்த நாட்டில் மிகவும் மதிக்கப்படும் சிறந்த நடிகர். அவர் கூறிய கருத்து 100 சதவீதம் சரியானது. ஏனெனில், கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நாட்டின் சமூக மற்றும் கலாசார முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட்டு வரும் ஓர் அமைப்பு நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டியதுதான்.

என இவ்வாறே அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கடுமையாக விமர்சித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V