Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ, 24 நவம்பர் (ஹி.ச.)
குருநானக் தேவ் அவர்களின் 557-வது பிரகாஷ் பர்வ் (பிறந்தநாள் ஒளிப் பெருவிழா) நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:
இன்று மிகவும் புனிதமான நாள். அதிகாலை 4 மணி முதலே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எனக்குத் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள சுக்தீர்த்தத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித கங்கை நதியில் நீராடி வருகின்றனர்.
ஹாபூர் மாவட்டத்தில் உள்ள கர்முக்தேஷ்வரில் இன்று காலை முதல் இதுவரை 15 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
அதேபோல், அம்ரோஹா மாவட்டத்தின் திக்ரி பகுதியில் உள்ள கங்கைக் கரையிலும் 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இதுவரை புனித நீராடியுள்ளனர்.
பிரயாக்ராஜ் மற்றும் ஃபரூக்காபாத் பகுதிகளிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். அயோத்தியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். காசியிலும் கங்கை நதியில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடி வருகின்றனர்.
மேலும், இந்தப் புனிதமான கார்த்திகை பௌர்ணமி தினத்தில் புகழ்பெற்ற 'தேவ் தீபாவளி' விழாவும் காசியில் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை பௌர்ணமி நமக்கு மேலும் ஒரு சிறப்புமிக்க நாளாகும். ஏனெனில், இதே நாளில்தான் சாஹிப் ஸ்ரீ குருநானக் தேவ் ஜி மகாராஜின் பிரகாஷ் பர்வ் (பிறந்தநாள் ஒளிப் பெருவிழா) கொண்டாடப்படுகிறது.
அவர் தெய்வீக ஞானத்தின் ஒளியை ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் வழங்கியவர்,
என புகழாரம் சூட்டினார்.
Hindusthan Samachar / LOGESHWARI V