குருநானக் தேவ் ஜெயந்தி -மக்களுக்கு உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வாழ்த்து
டேராடூன், 24 நவம்பர் (ஹி.ச.) குருநானக் தேவ் ஜெயந்தியையொட்டி, உத்தரகாண்ட் மாநில மக்களுக்கு முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். குருநானக் தேவ் போதித்த உழைப்பு, அன்பு மற்றும் பிறருக்கு உதவும் மனப்பான்மை ஆகியவற்றை அனைவரும் தங்
Sing thami


டேராடூன், 24 நவம்பர் (ஹி.ச.)

குருநானக் தேவ் ஜெயந்தியையொட்டி, உத்தரகாண்ட் மாநில மக்களுக்கு முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குருநானக் தேவ் போதித்த உழைப்பு, அன்பு மற்றும் பிறருக்கு உதவும் மனப்பான்மை ஆகியவற்றை அனைவரும் தங்களது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

டேராடூனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சீக்கியர்களின் புனிதமான பிரகாஷ் பர்வ் திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் தனது மரியாதையையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

குருநானக் தேவ் வழங்கிய போதனைகளின்படி ஒவ்வொருவரும் கடினமாக உழைக்க வேண்டும் என்றும், மற்றவர்களிடம் அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், பிறரின் முன்னேற்றத்திற்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பிரகாஷ் பர்வ் விழா உற்சாகமாகக் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா வளர்ந்த நாடாக உருவாக வேண்டும் என்றும், அந்த இலக்கை அடைவதில் உத்தரகாண்ட் மாநிலமும் முக்கியப் பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சீக்கியர்களின் புனிதத் தலமான ஹேம்குண்ட் சாஹிப் பகுதிக்கு ரோப்வே அமைக்கும் திட்டம், கர்தார்பூர் வழித்தடம் திறப்பு, ஹர்மந்திர் சாஹிப் தொடர்பான புனிதப் பொருட்களை உரிய மரியாதையுடன் மீட்டளித்தல், வீர் பால் திவாஸ் கொண்டாட்டம் மற்றும் குரு தேக் பகதூர் ஜியின் பிரகாஷ் பர்வ் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சீக்கியர்களின் லங்கர் எனப்படும் சமுதாய உணவுக்கூடத்திற்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் சுதந்திரத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகள் குறித்த லோவி இன்ஸ்டிடியூட் ஆய்வறிக்கையில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

அந்த ஆய்வில் பிரதமர் மோடி ஆசியாவின் இரண்டாவது சிறந்த செயல்திறன் கொண்ட தலைவராகக் குறிப்பிடப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் மோடி இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும் அதிக மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்படுவது நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமையளிப்பதாக புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.

கார்த்திகை பௌர்ணமி மற்றும் குரு பர்வ் ஆகிய புனித நாட்களை முன்னிட்டு, பிரதமர் மோடி நல்ல உடல்நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று குரு மகாராஜிடம் பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார்.

அவரது தலைமையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி, வளர்ந்த நாடாக உருவாக வேண்டும் என்றும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

Hindusthan Samachar / LOGESHWARI V