Enter your Email Address to subscribe to our newsletters

உசிலம்பட்டி, 25 நவம்பர் (ஹி.ச.)
இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகின்ற சூழலில்
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான வாலாந்தூர், தி.விலக்கு, தொட்டப்பநாயக்கனூர், நக்கலப்பட்டி, உத்தப்பநாயக்கனூர், வெள்ளைமலைப்பட்டி அல்லிகுண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் உசிலம்பட்டி பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த சூழலில் இந்த மிதமான மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
இதனால் இந்த மிதமான மழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / Durai.J