Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 25 நவம்பர் (ஹி.ச.)
தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு, பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குருவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போதிய தண்ணீர் மற்றும் மழை இல்லாததால் சம்பா பயிர்களும் காய்ந்து கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
எனவே, டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் அனைத்தையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாய சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.
அப்போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர்.
Hindusthan Samachar / GOKILA arumugam