தேனி மாவட்டத்தில் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி – மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு!
தேனி, 25 நவம்பர் (ஹி.ச.) இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, தேனி மாவட்டக் கிளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 77-வது ஜெனீவா ஒப்பந்த நாள் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பரிசுகள்
க


தேனி, 25 நவம்பர் (ஹி.ச.)

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, தேனி மாவட்டக் கிளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 77-வது ஜெனீவா ஒப்பந்த நாள் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு, அதில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், தேனி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் வேலம்மாள் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாணவி செல்வி எஸ். பியூஜிட்டா பேச்சுப்போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றார்.

அதேபோல், யூத் ரெட் கிராஸ் சார்பில் அரசு சட்டக் கல்லூரி மாணவி எம். நித்யஸ்ரீ கட்டுரைப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.

இதனைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற இரு மாணவிகளுக்கும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் வ. சிவகிருஷ்ணமூர்த்தி இ.ஆ.ப., பாராட்டுச் சான்றிதழ், பாராட்டுப் பதக்கம் மற்றும் தலா 3 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ரெட் கிராஸ் செயலாளர் க. சுருளிவேல், மாவட்ட யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ஆர். லாவண்யா, வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர் பிரசன்னா, உறுப்பினர் சரவணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளரும், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் துணைத் தலைவருமான எம். ராமகிருஷ்ணன், பரிசு பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இறுதியாக: மாநில அளவில் வெற்றி பெற்று தேனி மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த மாணவிகளுக்கு கல்வியாளர்கள் மற்றும் ரெட் கிராஸ் நிர்வாகிகள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / Durai.J