Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 நவம்பர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சியில் தவெக நிர்வாகி மீது பெண் ஒருவர் அளித்துள்ள பாலியல் புகார் தொடர்பாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து தவெக ஐ.டி. விங் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
அந்தப் பதிவில், கள்ளக்குறிச்சி பாலியல் புகார் தொடர்பாக பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு, சம்பந்தப்பட்ட பெண் மீது தங்கள் கட்சி நிர்வாகி மூன்று மாதங்களுக்கு முன்பே புகார் அளித்துள்ளதாக உதயநிதி தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அக்டோபர் 22, 2026 தேதியிட்ட புகார் கடிதம் வெளியானதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ள நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பே புகார் அளிக்கப்பட்டதாகக் கூறுவது முரண்பாடாக இருப்பதாக தவெக ஐ.டி. விங் விமர்சித்துள்ளது.
மேலும், தன் மீது தவறில்லை என்றால் சம்பந்தப்பட்ட நிர்வாகி ஏன் தலைமறைவாக இருக்க வேண்டும் என்றும், அவர் தற்போது எங்கே இருக்கிறார் என்பது உதயநிதிக்குத் தெரியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தப் பதிவின் மூலம் கள்ளக்குறிச்சி பாலியல் புகார் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கும் தவெகவுக்கும் இடையே அரசியல் ரீதியான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.
Hindusthan Samachar / GOKILA arumugam